திங்கள், 10 ஜூன், 2024

திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக கனிமொழி எம்.பி. நியமனம் மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழுத் தலைவராக திருச்சி சிவா ஆகியோரும் நியமனம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

  ▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 11-6-2024

photo

News by sunmugasunthram Reporter 


தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவராக கனிமொழி எம்பி நியமணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியானது 

இது பற்றிய செய்தியாவது:-



  தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது "மக்களவை - மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து தி.மு.க நாடாளுமன்றத்தின் குழுத் தலைவராக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி,  மக்களைவைக் குழுத் தலைவராக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, மக்களைவைக் குழுத் துணைத் தலைவராக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 




    மேலும், மக்களைவை கொறடாவாக துணைப் பொதுச்செயலாளர் இராசா, மாநிலங்களவைக் குழுத் தலைவராக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, மாநிலங்களவைக் குழுத் துணைத் தலைவராக தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் சண்முகம், மாநிலங்களவை கொறடாவாக தலைமை சட்ட தலைமை ஆலோசகர் வழக்கறிஞர் வில்சன், இரு அவைகளின் பொருளாளராக கொள்கைப் பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக