ஞாயிறு, 12 மே, 2024

தூத்துக்குடியில் எடப்பாடியார் 70- வது பிறந்தநாள் கொண்டாட்டம்

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

12-5-2024

photo news by arunan journalist 

May 12 இன்று முன்னாள் தமிழக முதல்வர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 70 - வயது  பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது .



இன்று ....

தமிழகம் முழுவதும் அதிமுகவினர் மத்தியில் வெகு சிறப்பாக இனிப்பு மற்றும் நலத்திட்டங்கள் அன்னதானம் உற்சாகமாக வழங்கி வருகிறார்கள்.


 தூத்துக்குடியில் அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் எடப்பாடியார் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.


புரட்சி தமிழர் எடப்பாடியார் பிறந்த நாளான  இன்று குழந்தைக்கு தங்க மோதிரம் !!!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று  ஆறு தாய்மார்களுக்கு பிரசவம் நடைபெற்றது .


அதில் ஒருவருக்கு இரட்டை குழந்தைகள் உட்பட ஏழு குழந்தைகள் பிறந்தன 

தூத்துக்குடி முன்னாள் மத்திய கூட்டுறவு சங்கம் தலைவர் மற்றும் மாவட்ட ஓட்டுநர் அணி செயலாளர் சுதாகர் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் இன்று பிறந்த ஏழு குழந்தைகளுக்கு தங்க மோதிரமும் பரிசு பெட்டகமும் பணமும் வழங்கினார் .  


அதன் பின்பு 11.00 மணிக்கு சிவன் கோவிலில் சிறப்பு பூஜையும் அன்னதானமும். நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அதிமுக கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சனி, 11 மே, 2024

தூத்துக்குடியில் ரூபாய் 20 சாப்பாடு சேது உணவகம் அசத்தல்!!!

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

11-5-2024

photo news by arunan journalist 

தூத்துக்குடியில் ரூபாய் 20 சாப்பாடு சேது உணவகம் 

அட்சய திருதியை முன்னிட்டு வழங்கினார்கள்



இது பற்றிய செய்தியாவது 


தூத்துக்குடியில் 

வ உ சி சாலை துவங்கும் எட்டையபுரம் சாலையில் சேது உணவகம் மகாதேவன் என்பவர் நடத்தி வருகிறார். 



இங்கு மிகவும் குறைந்த விலையில் தரமான சாப்பிடும் உணவு வகைகள் வழங்கி வருகிறது 



தக்காளி சாதம் ரு 25 தேங்காய் சாதம் ரு 25 

லெமன் சாதம் ரு 25 மற்றும் தோசை ரு 10 சப்பாத்தி ரு10


மதிய சாப்பாடு ரு 40 என குறைந்த விலையில் வழங்குவதும்  அப்பகுதியில் வரும் தொழிலாளர்கள் மற்றும் வெளியூர் இருந்து தூத்துக்குடியில் தங்கி படிக்கும் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் அளவில் வந்து சாப்பிட்டு குறைந்த விலையில் திருப்தியாகின்றன.



இன்று 11-5-2024 அட்சய திருதியை முன்னிட்டு சேது உணவகம் சாப்பிட வருபவருபவர்கள் அனைவருக்கும் சாப்பாடு ரு 20 மட்டுமே வழங்கினார்கள்.

பாராட்டு க்குரியது.


தூத்துக்குடியில் இது போன்று உணவகங்கள் அதிகம் வர வேண்டும் பொதுமக்கள் விரும்புகிறார்கள் .


ஆனால்? தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உணவகங்கள் விலைப்பட்டியல் பாத்தால் உடன் தலை சுற்றும் ?????

அதிக விலைக்கு சைவம் அசைவம் உணவகங்கள்  இருக்கின்றன 

எதன் அடிப்படையில் பொதுமக்கள் சாப்பிடும் உணவு அதிக விலை தீடீர் தீடீரென நிர்ணயம் செய்கிறார்கள் தூத்துக்குடி மாநகரில் பல உணவகங்களில் விலை பட்டியல் வைப்பது கிடையாது.

உணவு பண்டங்கள் விலை உயர்வு 

நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழை எளிய மக்கள் பயன் பெற சாப்பிட இயலவில்லை சிங்கிள் பெர்சன் நிலை அதோ கதி! என்பதே யதார்த்தம்.

 மதிய உணவு ஒவ்வொரு ஹோட்டல் களிலும் வெவ்வேறு விலை உயர்வு திக் ...திக் என்றிருக்கிறது  


அதிக விலை வைத்து உணவுகள் விற்கப்படும் உணவகங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் 


மேலும் சுகாதார அடிப்படையில் உணவு தயாரிப்பு செய்கின்றார்களா?

 என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்திட வேண்டும் 


பல உணவகங்கள்  தூசி மாசு விழும் சாலையில் முன்பு அடுப்பு வைத்து தயாரிப்பு நடைபெறுகிறது

இதுவெல்லாம் மாவட்ட அதிகாரி கள் பொதுமக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுக்கலாம் செய்வார்களா?!!!

வியாழன், 9 மே, 2024

கவர்னகிரி யில் விறுவிறுப்பான மாட்டு வண்டி பந்தய போட்டி ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ முனியசாமி கோவில் கொடை விழா

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா கவர்னர்கிரி தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட 

ஸ்ரீ காளியம்மன், 

ஸ்ரீ முனியசாமி கோவில்

கொடை விழாவை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் நடத்தும்

மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.





இந்நிகழ்ச்சியில் அ.இ.அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும் (மேற்கு)

 ஓட்டப்பிடாரம் அதிமுக முன்னாள்  எம்எல்ஏ மோகன் தலைமை தாங்கி பந்தயத்தை  துவக்கி வைத்தார்.



எல்கை பந்தயம் (சாலை கவர்னர்கிரி to சிலோன்காலனி) வழி:ஓட்டப்பிடாரம்

இன்று 9-5-2024 காலை 6.00 மணியளவில் நடைபெற்றது 

பூஞ்சிட்டு மாட்டு வண்டி

(போக வர 5மைல்)

முதல் பரிசு ரூ.15,000 வழங்கியவர்:  P.மோகன் B.Sc.,Ex.MLA. 

அ.இ.அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் (மேற்கு)

2வது பரிசு ரூ.10,000 வழங்கியவர்:  கோரிமுருகன்  (மேகலிங்கம் டிராண்ஸ்போர்ட்)

சின்னதுரைச்சாமி (எ)

மலைமதுகுமரன்

3வது பரிசு ரூ. 8,000 வழங்கியவர்: 

கனகரத்தினம் சுகுமார்) 

ஒன்றிய கவுன்சிலர்

ராமர் - லில்லிபுஷ்பம்கிளர்க்

4வது பரிசு ரூ.4,000 வழங்கியவர்:  எபனேசர்  நெடுஞ்சாலைத் துறை, கவர்னர்கிரி

தேன்சிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் (சாலை கவர்னர்கிரி to சிலோன் காலனி)

போட்டியை 

துவக்கி ய

 P.மோகன் B.Sc., Ex.M.L.A., 

அ.இ.அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் (மேற்கு)

(போக வர 4மைல்)



முதல் பரிசு ரூ. 10,000 வழங்கியவர்:  M.அன்புராஜ்  வடக்கு ஆவரங்காடு

P.முத்துமாலை  வடக்கு ஆவரங்காடு

2வது பரிசு ரூ. 8,000 வழங்கியவர்:  D.காட்டுராஜா - பிரேமா

3வது பரிசு ரூ.4,000

4வது பரிசு ரூ. 2,000

 R.ஏட்டையன் 

வழங்கியவர் 

:  M.சதிஷ் V3

வழங்கியவர்: M.மகேஸ்  சத்திகா ஆட்டோ கேப்ஸ்

பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியை விழா கமிட்டி மற்றும் கவர்னர் கிரி ஊர்மக்கள் சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தார் கள்.


சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில்தூத்துக்குடி கராத்தே வீரர்கள் சாதனை

 ▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

9-5-2024

Photo  news by sunmugasunthram Reporter

சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் இந்திய அணியைச் சேர்ந்த தூத்துக்குடி கராத்தே வீரர்கள் சாதனைகள் படைத்துள்ளார் கள்.

இது பற்றிய செய்தியாவது:-

      தூத்துக்குடி  கோஜுரியு வேர்ல்ட் கராத்தே டூ சோபுகாய் இந்தியாவின் சார்பாக இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் சுரேஷ் குமார்  தலைமையில் மலேசியாவில் சிலாங்கூர் மாகாணத்தில் கிங் ஆப்  டட்டாமி இன்டர்நேஷனல் கராத்தே போட்டி நடைபெற்றது.



 இப் போட்டியில் இந்திய கராத்தே வீரர்கள் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்று இந்திய  மண்ணிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தனர்.

      2024 மே 5ம் தேதி அன்று நடைபெற்ற இப் போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து பலதரப்பட்ட வீரர்கள்  பங்கேற்றனர். 


இப் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்ற தமிழக வீரர்களான  நித்திஷ் கட்டா பிரிவில் தங்கப் பதக்கத்தையும் சண்டை பிரிவில் வெள்ளி பதக்கத்தையும், யோவான் கேஸ்ட்ரோ கட்டா பிரிவில் தங்க பதக்கத்தையும், ரோஹித் அபிஷேக் கட்டா பிரிவில் தங்கப் பதக்கத்தையும்,  ஜோயல் பால் கட்டா பிரிவில் தங்க பதக்கத்தையும் வென்றனர்.


     வெற்றி பெற்ற மாணவர்களை சோபுகாய் கோஜுரியு கராத்தே பள்ளியின்  தூத்துக்குடி மாவட்ட தலைவர் சென்சாய் செந்தில் மாவட்ட கராத்தே செயலாளர் சென்சாய் முத்துராஜா மற்றும் பல்வேறு அமைப்பினர்கள் பெற்றோர்கள் பாராட்டினர்.

அதிமுக கோடை கால குடிநீர் பந்தல் தூக்கி எறிந்த தூத்துக்குடி மாநகராட்சி முன்னாள் அமைச்சர் களுக்கு கெளரவ குறைச்சல் முக்குடைப்பு இதனால்?

அருணன் செய்தியாளர்: 

தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கள் சித செல்லப்பாண்டியன் எஸ்பி சண்முகநாதன் இருவரும் திறந்து கோடைக்கால குடிநீர் பந்தல் இரண்டு நாளில் தூத்துக்குடி மாநகராட்சி ஆக்ரமிப்பு என்று கடாசி தள்ளினர்.

இதனால் அப்செட் ஆன அதிமுக முன்னாள் அமைச்சர் கள். திமுக விடம் முக்குடைந்து போயுள்ளனர் 

அதற்காக வே...

மீண்டும் அதிமுக கோடை கால தண்ணீர் பந்தல் இன்று திறப்பு 


இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடியில் கடந்த மே 1 தினம் (1-5-2024) முன்னிட்டு  அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் தூத்துக்குடி புதிய மாநகராட்சி நுழைவு வாயில் பகுதியில் கோடைக்கால குடிநீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது


மறுநாளே...அனுமதி மறுப்பு மற்றும் ஆக்ரமிப்பு என கடாசி தள்ளினர்.

தூத்துக்குடி மாநகராட்சி யால் ஆக்கிரமிப்பு என தூக்கி எறியப்பட்ட கோடைக்கால குடிநீர் பந்தல்!!!


 தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் சுற்றி ஆக்ரமிப்பு அகற்றுவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது


 இந்நிலையில்  அதிமுக முன்னாள் அமைச்சர் கள் சித செல்லப்பாண்டியன் எஸ்பி சண்முக நாதன் ஆகியோர் திறந்து வைத்த கோடைக்கால நீர் பந்தலை விட்டு வைக்குமா ? ஆக்ரமிப்பு அகற்றப்பட்டது.


இச் சம்பவம்...

அதிமுக முன்னாள் அமைச்சர் களுக்கு கெளரவ மேட்டராக பார்க்க ப்பட்டது. 

நேற்று திறந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கள் திறந்த குடிநீர் பந்தல் இன்று காணாததால் தூத்துக்குடி பொதுமக்கள் "ஙே" என பார்த்தார்கள் 

அதிமுக வுக்கு கெளரவ குறைச்சல் வந்தது .

இதனால்...

 தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் பகுதிக்கு அருகில் ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் இன்று 9-5-2024 புதியதாக கோடை கால குடிநீர் பந்தல் முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் திறந்து வைத்து நீர் மோர் வழங்கினார்.

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு இன்று 9-5-2024 குடிநீர் பந்தல் திறப்பு 


 ஆனால் இந்த தடவை முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் உடன் வரவில்லை ஏனோ மிஸ்ஸிங் 

இதுவாவது தூத்துக்குடி மாநகராட்சி யில் அனுமதி பெறப்பட்டதா ??? இல்லையா!! கேட்குகிறார்கள் 

சாதாரண தண்ணீர் பந்தல் விஷயத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கள் சித செல்லப்பாண்டியன் எஸ்பி சண்முகநாதன் ஆகியோர் திமுக விடம் முக்குடைந்து போயுள்ளார்கள் என்னத்த சொல்ல என்கிறார்கள்.

புதன், 8 மே, 2024

மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கைமனித உரிமை காப்பாளர் ஃபெர்டின் ராயன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது தமிழக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் வன்மையாக கண்டிக்கிறோம்

அருணன் செய்தியாளர்: 08.05.2024

பத்திரிகை

செய்தி:-

தமிழ்நாடு அரசு, ஊழலுக்கு எதிராக செயல்பட்ட நெல்லை ஆர்டிஐ (RTI)

செயல்பாட்டாளரும், மனித உரிமைக் காப்பாளருமான ஃபெர்டின் ராயன் மீதுகொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்காததை

மனிதஉரிமைக் காப்பாளர்கள் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.



இதுபற்றி செய்தியாவது:-

திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகராட்சி, மின்துறை சுரங்கத் துறை, உள்ளூர் திட்டக்குழு உறுப்பினர்களின் ஊழல்களை ஆர்.டி.ஐ சட்டத்தை பயன்படுத்தி உண்மையைக்

வெளி கொண்டு வந்து சட்ட நடவடிக்கை எடுத்ததால் மனித உரிமை காப்பாளர்

ஃபெர்டின் ராயன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


 இந்தக் கொலை

வெறி தாக்குதலை மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.


ஃபெர்டின் ராயன் மனித உரிமைக் காப்பாளர்

ஃபெர்டின் ராயன் என்பவர், ஆர்.டி.ஐ (RTI) ஆர்வலர் மற்றும் மனித உரிமைக்

காப்பாளர். தூத்துக்குடி மாவட்டம் கடல்புரம் இவரது சொந்த ஊராகும். மீன்பிடி

தொழில் செய்யும் பரதவர் அமைப்பில் மாநில நிர்வாகியாக உள்ளார்.

 பட்டதாரியான

இவர் பெங்களூர் சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் இவர்

திருநெல்வேலியில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்.


 இந்தப் பணிகளை கடந்து

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிமைகளை பெற்றுத் தரவும், அரசு அமைப்புகளில் நிலவும்

ஊழல்களை கண்டறிந்து தடுப்பதற்காக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை

பயன்படுத்தி (RTI) சட்டத் தலையீடு செய்வது, தொடர்ந்து மேல் முறையீடுகள் மூலம்

தனது கடுமையான போராட்டத்தின் வழியாக பல தகவல்களைக் வெளிக்கொண்டு

வந்துள்ளார். 


எனவே, ஃபெர்டின் ராயன் தனது செயல்பாட்டின் மூலம் மனித உரிமைக்

காப்பாளர் (HRD) ஆவார். 


இதனை ஐ.நாவின் மனித உரிமைக் காப்பாளர் பிரகடனம்

1998 உறுதிப்படுத்துகிறது.

தலையீடு செய்து தீர்வு கண்ட மிக முக்கியமான சம்பவங்கள்


மனித உரிமைக் காப்பாளர் ஃபெர்டின் ராயன், வாகைக்குளம் சுங்கச்சாவடி எல்லைக்கு

உட்பட்ட திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியை இணைக்கும் நான்கு வழி பாதை

உரிய பராமரிப்பின்றி சாலையில் சேதங்கள் ஏற்பட்டதால் பயனாளிகள்

விபத்துக்குள்ளாகும் நிகழ்வு அடிக்கடி ஏற்பட்டுள்ளது. இது குறித்த தகவலை

திரட்டி உயர்நீதிமன்றத்தில் தலையீடு செய்ததால் சுங்கச்சாவடி கட்டணத்தை வசூல்

செய்வதை நிறுத்துவதற்கான இடைக்கால உத்தரவை பெற்றார்.

....,....................................

திருநெல்வேலி மாநகராட்சி அதிகார வரம்பில் சட்டவிரோத மற்றும்

அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்றுவது தொடர்பாக பல்வேறு ரிட்

மனுக்களை அவர் தாக்கல் செய்துள்ளார்.

 குறிப்பாக சாராள் தக்கர் கல்லூரி அருகே

நான்குமாடி கட்டிடத்தில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு

மருத்துவபிரிவு செயல்படும் கட்டிடப் பகுதியில் எந்த கட்டமைப்பும் முறையான

அனுமதி பெறவில்லை என்பதனை ஆதாரங்கள் மூலமாக கண்டறிந்து உயர் நீதிமன்ற

தலையீட்டின் மூலம் சட்டவிரோதமாக செயல்பட்ட மருத்துவமனையின்

செயல்பாட்டைத் தடுத்து நிறுத்தினார்.

திருநெல்வேலியில் செயல்பட்டு வந்த 14

மருத்துவமனைக் கட்டிடங்களின்

அத்துமீறலை ஆர்டிஐ (RTI) சட்டத்தின் மூலம் தகவல் பெற்று அம்பலப்படுத்தியதோடு

பொதுக் கட்டிடங்களின் தீ மற்றும் பாதுகாப்புத் தேவைகள் குறித்தும் பிரச்சாரம் செய்து

அதற்கான தீர்வுகளைப் பெற்றுத் தந்துள்ளார்.

...,..................................

 வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும்

கருப்பு பணத்தை பயன்படுத்தி பழைய கட்டிடங்களை வாங்கி அதனை இடித்து

அரசிடம் எவ்வித முறையான அனுமதியும் பெறாமல் பெரிய, பெரிய வணிக

வளாகங்களை கட்டி அதில் அதிக லாபத்துடன் விற்று வந்த ஒரு கும்பல் குறித்து தகவல்

சேகரித்து மாநகராட்சியில் புகார் தெரிவித்தார். மனித உரிமைக் காப்பாளர் ஃபெர்டின்

ராயன் புகாரைக் கண்ட மாநகராட்சி நிர்வாகம், அதிர்ச்சி அடைந்து நூற்றுக்கும்

மேற்பட்ட கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

.................................................

ஒரு தனியார் நிறுவனம் திருநெல்வேலி மாநகராட்சியில் ரோடு போடுவதற்கு

காண்ட்ராக்ட் எடுத்தது. காண்ட்ராக்ட் எடுப்பவர்கள் தங்களது நிறுவனத்தின் பெயரில்

லாரிகள் உபகரணங்கள் கனரக இயந்திரங்கள் சொந்தமாக வைத்திருக்க வேண்டும்

என்பது ஒப்பந்த விதியாகும். ஆனால், எதுவுமே சொந்தமாக இல்லாத தனியார்

நிறுவனம் தங்களிடம் அனைத்தும் இருப்பதாக போலியான ஒரு பட்டியலை தயாரித்து

மாநகராட்சியிடம் கொடுத்துள்ளது. இம்முறைகேடு குறித்து புகார்

தெரிவிக்கப்பட்டதால் இந்த நிறுவனத்திற்கான டெண்டரை மாநகராட்சி ரத்து

செய்துள்ளது.





 மேலும் மாநகராட்சியை ஏமாற்றிய தனியார் நிறுவனத்தின் மீது

நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநெல்வேலி மாநகராட்சியில் ஆணையர் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். அதன்படி அதிகாரிகள் புகார் அளித்து வழக்குப் பதிவு

செய்யப்பட்டுள்ளது.

 இதுகுறித்த விசாரணையில் சாட்சி சொல்வதற்காக இருந்த நாளில்

04.05.2024 அன்று அதிகாலையில் மனித உரிமைக் காப்பாளர் ஃபெர்டின் ராயன்

கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்

கனிம வளங்கள் பாதுகாப்பு

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட எல்லைகளில் அங்கீகரிக்கப்படாத

குவாரிகள் மற்றும் சுரங்கங்கள் செயல்படுவது குறித்தும் கனிம வளங்களை பாதுகாப்பு

குறித்தும் அரசிற்கு பல்வேறு புகார்களை அனுப்பி உள்ளார்.


 சில ஆண்டுகளுக்கு முன்பு அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் இருந்த கல்குவாரியில் வெடி விபத்து ஏற்பட்டது.

வெடிவிபத்தில் சிக்கி தொழிலாளர்கள் பலியானார்கள். இதன்பின்பு மாநில அளவிலான

சுரங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தனர். 

இந்த அறிக்கையின் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு

 அவர்கள் 30 கல்குவாரிகளுக்கு அனுமதியை ரத்து செய்தார். 


ஆனாலும் அனுமதியின்றி

தற்போது கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றது.


 கல்குவாரிகளில் சிறுவர்களை பணி

அமர்த்தக் கூடாது என்று அரசின் விதிகள் இருந்த நிலையிலும் கடந்த சில நாட்களுக்கு

முன்பாக மானூர் கல்குவாரியில் வடமாநில சிறுவன் ஒருவன் இயந்திரத்தில் சிக்கி

இறந்துள்ளார்.


 எனினும் அரசு யார் மீதும் எந்த நடவடிக்கையும் இதுவரை நடவடிக்கை

எடுக்கவில்லை.


 இந்த நிலையில் ஆவணங்களைத் திரட்டி மனித உரிமைக் காப்பாளர்

ஃபெர்டின் ராயன் சுரங்கத்துறைக்கு புகார் அனுப்பி உள்ளார். 


சில தியேட்டர்களிலும்

வணிக நிறுவனங்களிலும் மின்வாரிய அதிகாரிகள் நேரடியாக விசாரணை

செய்யாமலேயே மின் இணைப்பு கொடுத்துள்ளனர்.


 இதுகுறித்து

விஜிலென்சில் புகார் கொடுத்துள்ளார்.


 இந்த புகாரின் மீதான விசாரணையில் சாட்சி

சொல்வதற்காக இருந்த நாளில் 04.05.2024 அன்று மனித உரிமைக் காப்பாளர்

ஃபெர்லின் ராயன் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்.

நீர்நிலை பாதுகாப்பு

மின்வாரிய

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தாலுகா, மேலப்பாளையம் கிராமத்தில்

உள்ள நீர்நிலை வண்டிப்பாதையில் உள்ள பொது நீர்நிலையான செட்டிக்குளம் மற்றும்

ஊட்டி வாய்க்கால்களில் (குளம்) உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆக்கிரமிப்பு இன்றி

பழைய நிலைக்குத் தருமாறு கேட்டுக் கொண்டார்.

மனித உரிமைக் காப்பாளர் ஃபெர்டின் ராயன் திருநெல்வேலி மாநகராட்சியில்

மழைக்காலங்களில் திடீர் வெள்ளம் ஏற்படுவதை தடுப்பதற்காக நீர் வழிப்பாதை

ஆக்கிரமிப்பை தடுத்து பாதுகாப்பான வழிகளை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தாலுகா, பார்பகுளம்

கிராமத்தில், சர்வே எண்.229/1ல் உள்ள, சர்வே எண்.244ல் உள்ள, 55 ஹெக்டேர் 76 ஏக்கர்

குளம் மற்றும் 19 ஹெக்டேர் 11 ஏரிகள் கொண்ட மற்றொரு குளம், சட்டவிரோதமான

முறையில், தனியாருக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதும் அரசின் கவனத்திற்கு கொண்டு

வந்துள்ளார்.

மனித உரிமை காப்பாளர் ஃபெர்டின் ராயன் தனது வாழ்நாள் முழுவதும் அதிகார

துஷ்பிரயோகத்திற்கு எதிராக நின்று சட்டப்படி செயல்பட்டு வந்துள்ளார்.

பாளையங்கோட்டை தாலுகாவில் உள்ள ராஜேந்திரநகர் சர்வே எண்.753/1, 754

பகுதியில் உள்ள பிளாட் எண். 35,36,37இன் அசல் உரிமையாளரை மறைத்து

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் துணைப் பதிவாளர் அலுவலகத்தில்

துணைப் பதிவாளர் திரு. ரவிகுமார் சட்டவிரோதமாக பதிவு செய்துள்ளார் என்பதனை

ஆவணத்துடன் அம்பலப்படுத்தினார்.

மீனவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்

மீனவர்கள் சர்வதேச எல்லையை கடக்கும்போது கொடூரமாக தாக்கப்படுவதும்,

எல்லை தாண்டி சென்றவர்களை கைது செய்வது அல்லது மீன்பிடி வலைகள் மற்றும்

 படகுகளை சேதப்படுத்துவது போன்ற அட்டூழியங்களுக்கு எதிராக மனித உரிமைக்

காப்பாளர் ஃபெர்டின் ராயன் தொடர்ந்து போராடி வந்துள்ளார்.

தூத்துக்குடி அனல் மின் நிலையங்கள் வெளியிடும் உமிழ்வையும், சட்டவிரோதமாக

அப்புறப்படுத்தப்பட்ட பல டன் எடையுள்ள சாம்பலையும், நீர்வாழ் சுற்றுச்சூழல்

எதிர்கொள்ளும் இழப்பையும் அம்பலப்படுத்தியுள்ளார்.

கோவிட் தொற்று பரவலின்போது அதிகமான ஏழை மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில்

அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப்

பெண்களுக்குத் தொடர்ந்து உணவு மற்றும் உடைகளை விநியோகிப்பதன் மூலம் பல

மனிதாபிமானத் தேவைகளைச் செய்துள்ளார்.



 தொடர்ந்து இந்த பணியை செய்ததால்

அவர் பின்னர் கோவிட் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திட்டமிட்ட கொலைவெறித் தாக்குதல்

பல்வேறு தளங்களில் பாதிக்கப்படும் மக்களுக்காக அவர்களின் உரிமைகளுக்காக

தொடர்ந்து செயலாற்றி வந்தவர் மனித உரிமைக் காப்பாளர் ஃபெர்டின் ராயன். 


தனது

உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்த நிலையிலும் அதைப் பற்றி கவலை

கொள்ளாமல் தொடர்ந்து மனித உரிமைப் பணியை முன்னெடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில்தான் பல புகார்களுக்கு சாட்சியம் அளிக்கக்கூடிய நாளான 04.05.2024,

அன்று வழக்கம்போல் காலையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பின்புறம்

அமைந்துள்ள சாலையில் உள்ள கிளப்பில் பேட்மிட்டன் விளையாடுவதற்காக

அதிகாலையில் தனது காரில் சென்றுள்ளார். பைக்கில் பின் தொடர்ந்து வந்த நபர்கள்

அரங்க வாயிலில் காரை மறித்து அரிவாளால் மனித உரிமைக் காப்பாளர் ஃபெர்டின்

ராயனை சரமாரியாக வெட்டியுள்ளனர். தலை, முதுகு, இரண்டு கைகளிலும் இரத்தம்

சொட்டச் சொட்ட, காரை ஓட்டி கிளப்பிற்குள் சென்றுள்ளார்.


 இதன்பின்பு பலத்த

காயத்துடன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.

தற்போது பாதுகாப்பு கருதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று

வருகிறார்.


கோரிக்கைகள்

.

மனித உரிமை காப்பாளர் ஃபெர்டின் ராயன் மீது திட்டமிட்டு கொலை வெறி

தாக்குதல் நடத்தியவர்களையும் அதற்கு பின்னணியில் இருந்து சதித்திட்டம்

தீட்டியவர்களையும் உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்ய தமிழக அரசு

நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சட்டவிரோதமாக செயல்பட்டு ஊழல் மூலம் பணம் சம்பாதித்து வந்த அரசு

அதிகாரிகளுக்கு எதிராக தொடர்ந்து சட்டப்படி செயல்பட்டு வந்ததால் மனித

உரிமைக் காப்பாளர் ஃபெர்டின் ராயன் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.


மேலும் அரசியல் அதிகாரம் படைத்தவர்கள் இதற்கு பின்னணியில் உள்ளார்கள்.


எனவே இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என

கோருகின்றோம்.

கொலைவெறித் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மனித உரிமைக் காப்பாளர் ஃபெர்டின்

ராயனுக்கு பாதுகாப்பான, தரமான, உயர் சிகிச்சை அளிக்க தமிழக அரசு ஏற்பாடு

செய்ய வேண்டும்.


 மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆயுதம் ஏந்திய

போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோருகின்றோம்.


• மனித உரிமைக் காப்பாளர் ஃபெர்டின் ராயன் மீது நடந்த கொலைவெறித் தாக்குதல்

வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு

செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாதுகாப்பும், நீதியும் நிவாரணமும்

பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகின்றோம்.



• தமிழ்நாட்டில் தொடர்ந்து மனித உரிமைக் காப்பாளர்கள் மீதான தாக்குதல்கள்

அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே மனித உரிமைக் காப்பாளர்களை

பாதுகாப்பதற்காக ஒன்றிய அரசு புதிய சட்டத்தை உருவாக்குவதற்கு தமிழக அரசு

நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு

தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கின்றது.


ஹென்றி திபேன்

தேசியச் செயலாளர்,

மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு-இந்தியா (HRDA)

தொடர்புக்கு: 99943 68576



செவ்வாய், 7 மே, 2024

போராட்டம் அறிவிப்பு கூட்டுறவு வங்கிகளில் குளறுபடிஓபிஎஸ் அணி ஏசாதுரை கண்டனம் தெரிவித்து.அறிக்கை வெளியிட்டுள்ளார்

Photo news by sunmugasunthram Reporter 

     தூத்துக்குடி தமிழக முன்னாள் அதிமுக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ, அணியின் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவருமான எஸ் ஏசாதுரை வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

     மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மக்கள் நலன் தான் முக்கியம் என்று கருதி கிராம பகுதியில் உள்ள ஊராட்சி பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி பகுதிகளில் தமிழக அரசின் சாா்பில் கூட்டுறவு வங்கி தேர்தல் முறையாக நடைபெற்றது .



அதற்கு பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அதிமுக ஆட்சி காலத்தில் நல்ல முறையில் இயங்கி ஏழை எளிய நடுத்தர மக்களின் நலன் காக்கும் வகையில் சிறு தங்கநகைக்கடன், விவசாய கடன், சிறு தொழில், வியாபார மானிய கடன் வங்கியில் வைப்பு தொகை சேமிப்பு கணக்கு இவை அனைத்தும் 1991ம் ஆண்டு முதல் கணினி மயமாக்கப்பட்டு பல்வேறு வகையில் வழங்கப்பட்டு செயலாற்றியது.


இந் நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் 5 சவரன் வரை கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றவர்கள் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு 5 சவரன் நகை திருப்பி வழங்கப்படும் என்ற தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக வழங்கியது 


ஆனால் ஆட்சிக்கு வந்த பின்பு அதில் சில நடைமுறைகளை பின்பற்றினால் தான் வழங்க முடியும் என்று திமுக அரசு கூறி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத காரணத்தால் பல தரப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 



   இந்நிலையில் மாவட்டத்தில் எதிா்பாராத கன மழை பெய்து வௌ்ள பாதிப்பு ஏற்பட்டது. 

அதில் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.


 கூட்டுறவு வங்கிகளில் தலைவர்களின் பதவிக்காலம் முடிவு பெற்றுள்ளதால் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்து வருகின்றன.


 இதில் மாநகராட்சி பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கி அவர்களது நேரடி பார்வையில் இருந்து இயங்குவதால் அதிகாாிகள் மூலம் பல்வேறு வகையான கடன்கள் வழங்குவதற்கு வாய்ப்புகள் ஏற்படுகிறது. 


ஊராட்சி பேரூராட்சி பகுதிகளில் இயங்கும் கூட்டுறவு வங்கிகளுக்கு தேர்ந்ெதடுக்கப்பட்ட தலைவர்கள் இல்லாத காரணத்தால் வங்கிகளுக்கு கடன் உதவி கேட்டு வருபவர்களுக்கு வழங்க முடியாத நிலை வருகிறது. 


இதை கருத்தில் கொண்டு திமுக அரசு துறை சார்ந்த அதிகாாிகள் கூட்டுறவு துறை அமைச்சர் சக்கரபாணி, ஆகியோர் ஏழை எளிய மக்களின் நலன் கருதி அதற்கான உத்தரவு களை பிறப்பித்து கடன்கள் வழங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும். 

வங்கி தீடீர் முடக்கம்!!!

கடந்த 10 நாட்களுக்கு முன்பாக வங்கியின் மென்பொருள் மாற்றப்பட்டு அதன் பின் வங்கி சேவைகள் சாிவர செய்ய முடியாமல் ஊழியர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

எதிர்ப்பு போராட்டம் !!!

 அதனால் வங்கியின் பதிவுகள் சேமிப்பு கணக்கு சேவை முதலீடுக்கான வட்டி வழங்குதல் நடைமுறையில் தவறுகள் ஏற்படுகின்றன.


 இதனால் கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.


 இதற்கு நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும் என்று தவறும் பட்சத்தில் கூட்டுறவு வங்கி முன்பு அதிமுக முன்னாள் முதலமைச்சரும் எம்.எல்.ஏவுமான ஓ.பன்னீர்செல்வம் அனுமதி பெற்று போராட்டம் நடத்தப்படும். என்று ஓபிஎஸ் அணி மாநகர் மாவட்ட செயலாளர் ஏசாதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.